பதவி இருக்கும் மமதையில் அமைச்சர் சேகர்பாபு வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மேலும் அவர், "சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90% முடிந்ததாக சேகர்பாபு மாற்றி மாற்றி ஒரே குரலில் பொய் பேசினார். பருவமழையின்போது பொய் கூறி சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கினார். தற்போது, திமுகவின் புதிய ஊதுகுழலான சேகர்பாபு இபிஎஸ்க்கு எதிராக விஷத்தைக் கக்கியிருக்கிறார்" என்று காட்டமாக கூறியுள்ளார்.