மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1220 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81,200 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. குறிப்பாக பார்த்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ் ஸ்டீல், டாடா ஸ்டீல் பங்குகள் தலா 3%-க்கும் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. மேலும்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 402 புள்ளிகள் உயர்ந்து 24,808 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.