கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சீஷெல்ஸ். ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் என்ற குறைந்த அளவிலான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கல்வி அறிவு விகிதம் 96.2 சதவீதமாக இருக்கிறது. இந்நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் மேம்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இங்கு வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை 0.5 சதவீதத்துக்கும் குறைவு தான். அதே போல வேலையின்மை விகிதம் 3.26 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.