சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கியுள்ளது. கேப்டன் பும்ரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், கோலி கேப்டனாக நியமிக்கப்படப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.