சென்னையிலிருந்து மதுரை வழியாக ரகசியமாக டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா-வையும் சந்தித்துப் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முகாமிட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமித் ஷா-வை எடப்பாடி பழனிசாமி இரு தினங்களுக்கு முன்பு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.