செம்புலி சம்பா ரக நெல் சிகப்பு நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதில் பலவிதமான சத்துக்கள் நிறைந்து இருப்பதால், இந்த வகையான அரிசிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இயற்கை விவசாயத்திற்கு ஏற்ப இலை, தழைகளை போட்டு மண்வளத்தை மேம்படுத்தி வைத்திருந்தால் இந்த ரக நெல், நல்ல மகசூலை தரும். ஒரு ஏக்கருக்கு 20 மூட்டைகள் வரை மகசூல் ஈட்டலாம். இந்த ரக நெல்லை பயிரிட்டு 140 நாளில் அறுவடை செய்யலாம்.