செல்லூர் ராஜூவை கலாய்த்த துரைமுருகன்

456பார்த்தது
செல்லூர் ராஜூவை கலாய்த்த துரைமுருகன்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும்; அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட முல்லை பெரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும்; அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம், எனவே கவலைப்பட வேண்டாம் என்றார். துரைமுருகன் பதிலால் அவையில் சிரிப்பலை நிலவியது.

தொடர்புடைய செய்தி