பாஜகவிடம் அதிமுக சீட் கேட்க வேண்டுமா? இவர் சீட் கொடுத்து நாம் நிற்க வேண்டுமா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக பேசியுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜூ, அண்ணாமலை ஒரு தறுதலை. பெரும்பான்மையுடன் இருந்த பாஜக அரசு மைனாரிட்டி அரசாக மாறியதற்கு காரணமே அண்ணாமலை போன்ற தலைவர்கள்தான் என ஒருமையில் சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.