சுகாதாரமற்ற முறையில் பானிப்பூரி விற்பனை: சித்தரிக்கப்பட்ட காணொளி

82பார்த்தது
கோவை பிஎஸ்ஜி அருகே சுகாதாரமற்ற முறையில் பானிபூரி விற்பனை செய்வதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது சித்தரிக்கப்பட்டது. மேலும், இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல என தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு தெரிவித்துள்ளது. சித்தரிக்கப்பட்ட இக்காணொளி மே மாதமே சமூக வலைத்தளங்களில் பதிவாகி இருக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி