புதுச்சேரியில் போலி பீர் விற்பனை? - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

59பார்த்தது
புதுச்சேரியில் போலி பீர் விற்பனை? - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் வாடிக்கையாளர் ஒருவர் 2 பீர்களை வாங்கி சாப்பிட்டதாகவும், இரண்டும் ஒரே கம்பெனி ஆனால் கியூஆர் கோடு மற்றும் லேபில் மாறியுள்ளது என அந்த குடிமகன் புகைப்படத்துடன் ஆடியோ குரல் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை அதிகாரிகள் கூறுகையில்:
சமூக வலைதளத்தில் வெளியான பீர் குறித்த தகவலில் ஒரு பீர் கர்நாடகா மாநிலத்திலும், 2-வது பீர் கோவாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒரிஜினல் பீர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு இடங்களில் தயாரிக்கப்பட்டதால், லேபிள் மற்றும் கியூஆர் கோடு மாறியுள்ளது என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி