உத்தரப் பிரதேசத்தில் ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே திருமணமான பிரீத்தி, நிதியுதவி பெற பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷை திருமணம் செய்யவிருந்தார். ஆனால், கணவர் வராததால் நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த விவகாரம் பூதாகரமானதால் பிரீத்தி, ரமேஷ், கிருஷ்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.