அருணாச்சலேஸ்வரர் கோயில் வசந்த உற்சவம் தொடக்கம்

82பார்த்தது
அருணாச்சலேஸ்வரர் கோயில் வசந்த உற்சவம் தொடக்கம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சித்திரை வசந்த உற்சவம் இன்று (ஏப்ரல் 13) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 4:30 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்த விநாயகர் சன்னதி முன்பாக இந்த பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும். தொடர்ந்து, நாளை (ஏப்ரல் 14) முதல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அருணாச்சலேஸ்வரருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்புடைய செய்தி