கேரளாவின் கோட்டயம் மாவட்டம் மண்ணார்காட்டில் குடும்ப பிரச்சனையில், ஹரிகிருஷ்ணன் (26) என்ற நபர், பிரஷர் குக்கர் மூடியால் தனது தாயை அடித்துக் கொன்றுள்ளார். சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் தனது தாயின் தலையில் தனது கை மற்றும் பிரஷர் குக்கரின் மூடியால் பலமுறை அடித்துள்ளார். மகனின் வெறிச் செயலில் இருந்து தாய் தப்பிக்க முயன்ற போதும், துரத்திச் சென்று அடித்துள்ளார். இதில் சுருண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் உயிரிழந்தார். ஹரிகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.