சென்னை - மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம்

56பார்த்தது
சென்னை - மொரிஷியஸ் விமான சேவை  மீண்டும் தொடக்கம்
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னை - மொரிஷியஸ் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 173 பயணிகளுடன் இன்று மீண்டும் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டுச் சென்றது. மொரிஷியஸ் நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவர்கள், 4 ஆண்டுகளாக விமான சேவைகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். இந்நிலையில் மீண்டும் நேரடியாக சென்னை - மொரிஷியஸ் இடையே விமான சேவைகள் தொடங்கியுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி