திருநெல்வேலி திம்மராஜபுரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் மருது பாண்டி மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருநெல்வேலி மக்களவை தொகுதியில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அரசு பேருந்தில் பாஜக தேர்தல் பிரச்சார சுவரொட்டி ஒட்ட முயன்ற போது தடுத்த ஓட்டுநர் சுப்பிரமணியனை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.