திருமண விழாவில் பங்கேற்க சீமான் இன்று நெல்லை வருகை!

62பார்த்தது
திருமண விழாவில் பங்கேற்க சீமான் இன்று நெல்லை வருகை!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் இல்ல திருமண விழா இன்று நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லைக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த உள்ளார்‌. இதற்கான ஏற்பாட்டை திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நிலையில், 20 நாட்கள் தேர்தல் பரப்புரைக்கு பிறகு, தென் மாவட்டத்திற்கு இன்று செல்கிறார்.

தொடர்புடைய செய்தி