அடிப்படை டேஷ்.. அறிவு இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை என டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் காட்டமாக விமர்சித்துள்ளார். திருச்சி செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், "மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேசுகிறார். ஐபிஎஸ் என்பது மிக உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் சீமான் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.