இமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் இன்று (ஜன.07) மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.