நான் சினிமா துறையில் இருப்பது பலருக்கும் பிடிக்கவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர், "என்னைப்போல ஒரு சாமானியன் திரைத்துறையில் வருவது மற்றும் அதில் சாதிப்பதை ஒரு தரப்பு மக்கள் வரவேற்கின்றனர். ஆனால், சிலர் இப்படி ஒருவன் திரைத்துறைக்கு வருவதை விரும்பவில்லை. அவர்கள் நீ யார்? நீ ஏன் இங்கு வந்தாய்? உனக்கு இங்கு என்ன வேலை? என சிலர் என் முகம் எதிரே கேள்வி கேட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.