துபாய் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கும் அஜித்குமார் அதற்கான பயிற்சியில் இன்று (ஜன.07) ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிய கார் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்தின் போது கார் சுழன்று நின்ற காட்சிகள் வெளியான நிலையில், அஜித்தின் தற்போதைய புகைப்படத்தை ஃபேபியன் டஃபியக்ஸ் என்ற சக ரேஸர் பகிர்ந்துள்ளார்.