கோயில் வழிபாட்டில் தேங்காய் உடைக்கும் போது சரிபாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியுமாக உடைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப் பார்க்கக்கூடாது. தேங்காய் சிறு, சிறு துண்டுகளாகச் சிதறினால் நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.