சமஸ்கிருதம் சக்திவாய்ந்த மற்றும் அறிவியல் பூர்வமான மொழி என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சமஸ்கிருத தினவிழாவில் உரையாற்றிய ஆளுநர் ரவி, "சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாசாரம் தோன்றியது. சமஸ்கிருத மொழியை தவிர்த்த தருணத்தில் நமது கலாசாரம் அழியத் தொடங்கிவிட்டது. நவீன அறிவியல், தொழில் நுட்பத்திற்கேற்ப சமஸ்கிருதத்தை எடுத்துச்செல்ல வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.