விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் - போலீசில் புகார்

63656பார்த்தது
விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிச.28ஆம் தேதி காலமானார். விஜயகாந்த்திற்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பும்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் விஜய் மீது செருப்பு வீசியதாக தெரிகிறது. இந்நிலையில், செருப்பு வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல்நிலையத்தில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் புகார் அளித்தனர்.