சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சி. என். பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி மூலவருக்கும் உற்சவருக்கும் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான
நேற்று 28 (செப்) சுவாமிக்கு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரணையில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திரு கோடி ஏற்றி, குழந்தை வரம் வேண்டிய இரண்டு தம்பதியினர் குழந்தையின் எடைக்கு நிகராக துலாபாரத்தில் ரூபாய் நாணயங்களை கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள். பக்தர்கள் நீண்ட வரிசையில்நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.