சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் வாழப்பாடி ரயில் நிலையம் முன்பு ஒன்று திரண்டு இந்திய திருநாட்டை ஆள்வதற்கு மோடிக்கு தகுதி இல்லை என மோடியா கேடியா என கோசமிட்டு உள்துறை அமைச்சரை பதவி விலக வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை முழக்கியும் ரயில் முன்பு அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விசிகாவினரை அப்புறப்படுத்தி வாழப்பாடி போலீசார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.