மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயதுடைய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூரில் நேற்று 10 வயதுடைய சிறுமி மாயமானார். இரவு முழுவதும் சிறுமியை தேடி அலைந்த அதிகாரிகள் இன்று காலை சிறுமியை மீட்டனர். அவரின் அந்தரங்க உறுப்பில் பலாத்காரம் செய்யப்பட்ட அடையாளம் இருக்கவே அதிகாரிகள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமி கூறிய பதிலின் அடிப்படையில் குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ளது.