சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டு இருக்கின்றன. 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வானில் வட்டமடிப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் இருந்து சென்னையில் தரை இறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்கு திரும்பிச் சென்றது.