ஆவினில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆவின் வழக்கு உள்ளிட்ட இருவேறு வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் ரவி அனுமதி வழங்கினார்.