புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதா சிங், தனது மகள் திருமணமான 1 மாதத்தில் கணவரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். “எங்களின் இருட்டுக்கடை உரிமையை எழுதி தர வேண்டும் என மிரட்டுகின்றனர். என் மருமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது, அவரின் தந்தையும் இந்த வரதட்சணை கொடுமைக்கு உடந்தை” என்றார்.