தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. "பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெகன்நாத் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.