அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "குட் பேட் அக்லி". இப்படத்தில் 'என் ஜோடி மஞ்ச குருவி', 'இளமை இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்' என்ற 3 இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், பாடலின் உரிமைத்தை வைத்துள்ள இசை நிறுவனத்திடம் அனுமதி பெற்றே பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.