உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர் தனது வருங்களா மாமியாருடன் ஓட்டம் பிடித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல்-க்கும் ஜிதேந்திரகுமார் - அப்னா தேவி (40) தம்பதியின் மகள் ஷிவானிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்னதாக ராகுல் தனது மாமியார் அப்னா தேவியுடன் வீட்டை விட்டு ஓடினார். இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.