இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

73பார்த்தது
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோடு அருகே செயல் பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூ னிஸ்டு கட்சி சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாரதி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமன், கந்தன் உள்பட அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதாக கூறி டாஸ்மாக் கடையை முற்றுகை யிட முயன்றனர். இதையடுத்து அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதற்கு சாத்தியக்கூறு உள்ளதா? என டாஸ்மாக் அதிகாரிகளிடம் அன் னதானப்பட்டி போலீசார் கேட்டனர். அதற்கு உரிய நடவ டிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிதுநேரம் கழித்து அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி