சின்னனூர் பகுதியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்

62பார்த்தது
சின்னனூர் பகுதியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் அடுத்த சின்னனூர் பகுதியில், வட்டார வேளாண்மை துறை சார்பில், 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உதவி இயக்குனர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். இதில் 600 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை, அட்மா குழு தலைவர் விஜயகுமார் வழங்கி பேசினார். இதில் பேரூராட்சி தலைவர் பாபு, துணைத்தலைவர் செல்வசூர்யா சேதுபதி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அகரம் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்குபதி செந்தில்குமார், காசிலிங்கம், சுப்பிரமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஜய் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் செந்தில், பழனிவேல், சொக்கநாதன்,
முருகேசன், சரவணன், ரவீந்திரன், மகாலிங்கம், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பாரதி செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி