சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு நிதியுதவிபெறும் ஜெயஜோதி தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா நேற்று பள்ளிக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஓமலூர் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி மேரி இமாக்குலேட் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஆர். சி. செட்டிப்பட்டி இல்லத்து அன்னை செல்மாமேரி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.