ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பு

53பார்த்தது
ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பு
குடியரசு தினத்தை ஒட்டி நாளை(ஜன.26) ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது மரபு ஆகும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை என காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன. இந்நிலையில் தமிழக அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகவும், அரசு சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி