சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் 29.08.2024 இன்று நடைபெறவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ. மேனகா தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டம். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர்களுக்கான ஆகஸ்ட்-2024 மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் 29.08.2024 இன்று முற்பகல் 11. 00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண். 115 கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.