மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசகாரனூர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 12- ஆம் தேதி வரை பூத் சிலிப் வழங்கும் பணி 83. 39% நிறைவுப் பெற்றுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.