இளம்பிள்ளை மாணவி பொறியியல் படிப்பிற்கு மாநிலத்தில் முதலிடம்

75பார்த்தது
இளம்பிள்ளை மாணவி பொறியியல் படிப்பிற்கு மாநிலத்தில் முதலிடம்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் வீரபாண்டி அரசு  மாதிரி பள்ளியில் நடுவனேரியை சேர்ந்த விசைத்தறி கூலி தொழிலாளியான செல்வம் மகள் ராவணி 12-ம் வகுப்பு  பொதுத்தேர்வில் 586 மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பிற்கு கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இருந்தார். இதனிடையே  அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 7. 5 சதவீத உள் ஒதுக்கீட்டின் படி  மாணவி ராவணி தமிழக அளவில் முதலிடம் பிடித்தார்.
இது குறித்து மாணவி ராவணி கூறுகையில், தான் ஒரு விசைத்தறி கூலி தொழிலாளியின் மகள் என்றும், எனது தந்தை, தாய் , உறவினர்கள் , பள்ளி ஆசிரியர் , ஆசிரியயைகள் ஆகியோரின் ஊக்கத்தினால் +2 பொதுத்தேர்வில் 586 மதிப்பெண் பெற்று பள்ளியில் சாதனை புரிந்து வந்தேன் என்றும், நான் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பத்தி இருந்தேன். தற்போது 7. 5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அளவில் முதலிடம் கிடைத்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், நான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது  லட்சியம் என்றும்,   இந்த வாய்ப்பினை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். மாநிலத்தில் முதலிடம் பெற்ற ராணவிக்கு பெருமா கவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சதீஷ்குமார், துணைத் தலைவர் வடிவேல், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் , ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி