நரம்பியல் தொழில்நுட்பத்துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு

69பார்த்தது
நரம்பியல் தொழில்நுட்பத்துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுச்சேரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நரம்பியல் தொழில்நுட்பத்துறை சார்பில் முதல் சர்வதேச கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் எஸ். கணேசன் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. முதல் நாள் கருத்தரங்கில் கல்லூரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார். அமைப்பு செயலாளர் ஸ்ரீஸ்ருதி வரவேற்றார். பேராசிரியர் செந்தில்குமார் நரம்பியல் தொழில்நுட்ப துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக சர்வதேச பேச்சாளர்கள் பார்த்தசாரதி முருகேசன், டாக்டர் அருண்பிரகாஷ், ரிச்சர்ட் இளமுருகன், மனிஷா, ஸ்ரீஸ்ருதி ஆகியோருடன் அறிவியல் அமர்வுகள் நடந்தன.
2-ம் நாள் கருத்தரங்கு சர்வதேச பேச்சாளர்கள் இளநாகன் நாகராஜனின் அறிவியல் அமர்வுடன் தொடங்கியது. நரம்பு கடத்தல் ஆய்வுகள், எலக்ட்ரோமையோகிராபி மற்றும் மோட்டார் மூளை மேப்பிங் ஆகியவற்றில் 3 பயிற்சி பட்டறைகள் நடைபெற்றது. தொடர்ந்து விஜய் கே. ஜெயச்சந்திரன், ஜோவா பிசாரோ, மனோஜ் ராய், டாக்டர் சனல் ஆபிரகாம், எலிடிம்ஸ், காமாட்சி, ஹேமா ஸ்ரீ நிர்மல் குமார் ஆகியோரால் சர்வதேச மெய்நிகர் அமர்வுகள் நடைபெற்றன.
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி