15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

75பார்த்தது
15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, நாமக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி