ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி சரக்க பிள்ளையூர் பெரியநாகலூர் கிராமத்தில் செல்வ விநாயகர், பெரிய மாரியம் மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள் ளது. இதையொட்டி கடந்த மாதம் 24-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் மேல் கீழ் தின்னப்பட்டி அமராவதி அம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் புனித தீர்த் தக்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். யானை. குதிரை, பசு, மங்கள வாத்தியம், கிராம வாத்தியம், பம்பை, உடுக்கை, தாரை, தப்பட்டை உடன் நடைபெற்ற இந்த ஊர்வ லத்தில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேறு தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் பகலில் அன்னதானம் நடைபெற் றது. மாலையில் முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜை களும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜை, புதிய சிலைகளில் கண் திறப்பு மற்றும் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெ றுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது