சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் ராகிங் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார். இதில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை தமிழ்நாடு விதவை மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் ரேணுகா ஆலிவர் மற்றும் சேலம் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் அஸ்வந்த் வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அதற்கான தண்டனை சட்டங்கள் குறித்தும், பெண்கள் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினார்கள்.
சேலம் மாவட்ட சமூக நல பிரிவின் பாதுகாப்பு அதிகாரி சத்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த், இளம் இந்தியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாவட்ட சுகாதார கல்வியாளர் பிலவேந்திரன், சக்திவேல், ஹரி பிரசாத் ஆகியோரும் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சி முடிவில் மாணவ, மாணவிகள் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியும் ஏற்றனர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் தீக்ஷரம் நிகழ்வின் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.