சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே இலுப்ப நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அரசு மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் வீரகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் ஒருவரிடம் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஐயா ஒன்றும் கட்டுபடி ஆகவில்லை 15 முதல் 30 பாட்டில்கள் மட்டுமே ஓடுவதாகவும், 1500 ரூபாய் கொடுப்பதாகவும் கூறுகிறார் அதற்கு மறுமுனையில் பேசும் போலீசார் வழக்கு சம்பந்தமாக கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளுக்காகவும்பணம் கேட்பதாக கூறுகிறார் மேலும் 1700 ரூபாய் தருவதாக செந்தில்குமார் கூறிய நிலையில் அது முடியாது. வைத்து விடு என இணைப்பை துண்டித்து விடுகிறார் இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.