சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரம் முருங்கப்பட்டி பெத்தாம்பட்டி கிராமத்தில் புதிதாக கோடிலிங்கேஸ்வரி உடனுறை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில், கோவில் நிறுவனரும், நவகோடி சித்தர்கள் தொண்டு மையத்தின் நிறுவனருமான சுவாமி சித்தரசு கலந்து கொண்டு முகூர்த்தகால் பூமிபூஜை செய்து திருப்பணிகளை தொடங்கி வைத்தார். ஸ்தபதி தனபால் முன்னிலை வகித்தார். கோவில் திருப்பணி நிர்வாகிகளான செயலாளர் பூபதி, பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலைவர்கள் குருராஜா, பொறியாளர் மணிசேகரன், ஆடிட்டர் சரவணன் உள்பட பக்தர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவபுராண பராயணமும், ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.