சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரோட்டில் நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் வந்த கார் ஒன்று முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றது.
ஆனால் அந்த கார் எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பகுதியில் சிக்கியது. மேலும் அந்த காரை பஸ் சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றது. இதைப் பார்த்து பஸ் பயணிகள் மற்றும் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பஸ்சை டிரைவர் உடனே நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்தவர்கள் வேகமாக இறங்கி காரில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் இந்த விபத்துக் காட்சி அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி உள்ளது. தற்போது அந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.