பெற்றோர் திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து சாவு

4652பார்த்தது
பெற்றோர் திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து சாவு
சேலம் கருப்பூர் கோட்டகவுண்டம்பட்டி வெற்றிலைக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ரஞ்சித்குமார் (27). இவர் கடந்த 11ம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதை பெற்றோர் கண்டித்தனர். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி