சங்ககிரியில் தேசிய யோகாசன போட்டியில் கல்லூரி மாணவர்கள் சாதனை
தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு ஐதராபாத்தில் தேசிய யோகாசன போட்டியை நடத்தியது. இதில் சுவாமி விவேகானந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர் விஷால் தனிநபர், இருவர், குழு உள்ளிட்ட பிரிவுகளில் வெள்ளி பதக்கமும், ஸ்ரீராம், அபிஷேக், கமலேஷ் ஆகியோர் இருவர், குழு பிரிவில் வெள்ளி பதக்கம் மற்றும் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். சாதனை மாணவர்களை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளர் கருணாநிதி, நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி, இணை நிர்வாக இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் ஸ்ரீராகநிதி, துணைத்தாளாளர் கிருபாநிதி, சுவாமி விவேகானந்தா நேச்சுரோபதி யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோதி நாயர் ஆகியோர் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.