சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டியை அடுத்த வடக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50), அரசு பஸ் டிரைவர். இவர், பூலாம்பட்டி- மேட்டூர் சாலையில் கரும்பு தோட்டம் அருகில் நின்ற போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் அவர் மீது மோதியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.