சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூர் சந்திர நல்லூர் பகுதியில் மண் லோடு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (24), சுதாகர் (23) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொப்பூர் காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.